Thursday, September 22, 2016

உச்சத்துல சிவா - திரைப்பட விமர்சனம்

By
நேற்று கரண் நடிப்பில் வெளியாகி இருக்கும் உச்சத்துல சிவா திரைப்படம் பார்த்தேன்.நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் கரண் நடித்து வெளிவந்து இருக்கும் திரைப்படம்.கடைசியாக இவர் நடித்த வெற்றி படம் கொக்கி அதற்கு பிறகு அவர் நடித்த இரண்டு படங்களும் வெளியான தகவல்கள் மட்டுமே தெரிந்தன.சரி விமர்சனத்தை ஆரம்பிப்போம்.

இந்த திரைப்படன் தொடக்க காட்சி ஒரு சாலையோர தள்ளு வண்டி உணவகத்தில் ஒரு சிறுவனுடன் ஆரம்பமாகிறது.உணவு தீர்ந்து போகும் நிலையில் உள்ளதால் கடையில் இருந்த சிறுவன் யாரையோ அழைக்கிறான் அவன் அழைத்த அந்த நபர் ஏதோ முக்கிய மான விஷயத்தை போர்வைக்குள் புகுந்து கொண்டு செய்கிறார்.பிறகு எழுந்து வந்து அப்படியே இட்லி மாவுக்குள் கையை விட வறுகிறார் இடையே ஒரு கை வந்து அந்த கையை தடுக்கிறது.அது தான் கதா நாயகனின் கை.கரனின் அறிமுக காட்சி அதுதான்.ஆனாலும் தான்பிறகு ஒரு சில நல்ல விஷயங்கள் கூறப்படுகிறது.கரண் ஒரு கால் டாக்சி டிரைவர் உணவகத்தில் அறிவுரை கூறிவிட்டு இடிலியையும் சாப்பிட்டு விட்டு அவருடைய டாக்சியில் பயணம் செய்யும் ஞான சம்பந்தத்துடன் (ஞான சம்பந்தம் காலையில தொலைக்காட்சில வந்து கருத்து சொல்லுவார அவருதான் ) புறப்பட்டு செல்கிறார்.நடுவில் ஒரு தொலைபேசி அழைப்பு கரனுக்கு வருகிறது "சிரித்த்துக்கொண்டே தம்பி நான் அம்மா பேசுறேன் " இது தான் அந்த அழைப்பின் ரிங்டோன் குரல் மட்டும் தான் கோவை சரளா போல் கேட்கிறது யார் என்று பின்னால் காட்டுவார்கள் நாம் படத்துடன் பயணிப்போம் என்று பயணத்தை துவக்கினோம்.அந்த தொலைபேசியில் 33 தடவையாக பெண் பார்க்கபோவதை ஞயாபகபடுத்து கிறார் கரனின் அம்மா.சில கருத்துக்களை கூறி விட்டு நான் இறங்கும் இடம் வந்தது என்று இறங்கி விடுகிறார் ஞான சம்பந்தன்.நான் என் இவ்வளவு நீளமாக இந்த காட்சிகளை எழுதினேன் என்றால் இந்த திரைப்படத்திலேயே இது தான் மிக நீளமான கத்திரி வைக்கப் பட்டு இருக்க வேண்டிய காட்சி.இதன் பிறகு கதை சற்று வேகம் எடுக்கிறது.

அங் இருந்து கிளம்பிய கரண் ஒரு பெண்ணையும் ஆவலுடன் ஒரு ஆணையும் கல்யாணதிற்கு அணிந்திருக்கும் ஆடைகளுடன் பார்க்கிறார். அவர்களை துரத்தி வந்த கும்பல் அந்த வாலிபனை சுட்டு விடுகிறார்கள் பின்னர் அந்த பெண் கரனிடம் உதவி கேட்டு அவர் டாக்ஸியில் ஏறிவிடுகிறார்.எரிய அந்த பெண் தான் திரைப்படத்தின் நாயகி அவர் ஏன் இப்படி துரத்தப்படுகிறார் என்ற கதையை கரனிடம் கூறுகிறார்.அவரை ஒருவர் காதலித்ததாகவும் அதற்கு அவர் அண்ணன் ஆதரவு தந்ததாகவும் ஆனால் அப்பா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதனால் தான் இப்படி துரத்துகிறார்கள் என்று கூறுகிறார்.நாயகியின் மேல் நாயகனுக்கு தொடக்கத்தில் இருந்தே ஒரு மோகம் இருந்தது அதனால் அவர் என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்கிறார்.அதற்கு பின் ஒரு இடத்தில் நாயகியின் அன்னான் வர சொல்ல இவர்கள் செல்வதற்குள் நாயகியின் தந்தை அவரை கொன்று விடுகிறார் .இப்பொழுதும் நாயகியை காப்பாற்றும் எண்ணத்தோடு அவரை அழைத்து கொண்டு வேகமாக டாக்ஸியில் செல்கிறார்.அப்பொழுது போலீஸ் பின் தொடர்கிறது நடந்ததை எல்லாம் போலீசிடம் கூறிவிட்டு உன் தந்தையை மாற்றிவிடலாம் என கூறிய கரணை நீ தள்ளிப்போ பொடியா என கரணை தள்ளிவிட்டு டாக்ஸியை வேகமாக ஓட்டிச்செல்கிறார் அதுமட்டுமல்லாமல் துப்பாக்கியை வைத்து போலிஸ் வண்டியையும் சுடுகிறார்.தப்பிக்க முற்படும் பொழுது அவரையும் சுட்டுவிடுகிறார்கள் இம்முறை சுட்டது போலீஸ் அத்துடன் முதல் பாதி முடிவடைகிறது.

இரண்டாவது பாதியில் டாக்சி இவருடையது என்பதால் இவரை கைது செய்கிறார்கள் கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் அண்ணன் அவளின் உண்மையான அண்ணன் இல்லையென்றும் கொலைசெய்த நாயகியின் தந்தை அவருடைய உண்மையான தந்தை இல்லை என்றும் கரனுக்கு தெரிய வருகிறது.பிறகு நகைச்சுவை கலந்த ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள் ஒரு சில காட்சிகள் யதார்த்தத்தை மீறி இருந்தாலும் கரனின் இயல்பான நடிப்பு அதை சரி செய்து விடுகிறது.சண்டை காட்சிகளை நீங்கள் கண்டிப்பாக திரை அரங்குக்கு சென்று பார்க்கலாம் மிக அழகாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை மசாலா படம் என்றே கூற முடியும்.நல்ல அருமையான திரைக்கதை இதனை மிக யதார்த்தமாக எடுத்து இருந்தால் கரனுக்கு இது இன்னொரு வெற்றி படமாகவும் தமிழ் சினிமாவில் நாயகனாக ஒரு ரீ என்ட்ரி படமாகவும் அமைந்து இருக்கும்.

காதல் கோட்டை படத்தில் தல அஜித்தை விட நன்றாக நடித்திருந்தது நீங்கள்தான் என்று திரைப்படம் பார்த்துவிட்டு வெளியேவந்த எனது நபர்கள் கூறீனார்கள் நானும் அதை சில காட்சிகளில் உணர்ந்தேன்.அவ்வளவு திறமையும் உள்ள உங்களுக்கு ஏன் இன்னும் ஒரு பெரிய திருப்புமுனை அமையவில்லை என்று தெரியவில்லை.

மீண்டும் முயற்சி செய்யுங்கள் கரண்.அடுத்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.




1 comment:

  1. இரண்டு நாட்களுக்கு முன் தான் பார்த்தேன்..நல்ல கதை..திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி, மசாலா-வை குறைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பான படமாக இருந்திருக்கும்..கரணின் நடிப்பு அருமை..
    ரொம்ப நல்ல விமர்சனம்..தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete