Thursday, October 15, 2015

மந்த்ரா 2(2015) - விமர்சனம் | Mantra 2(2015) -Review

By

நடிகை ஷார்மி நடித்து தெலுங்கில் வெளியாகி உள்ள திரைப்படம் அதனை தமிழில் டப்பிங் செய்து கொடுத்து இருக்கிறார்கள்.நடிகை ஷார்மி இவருடைய அறிமுகப்படம்  தமிழில் சிம்புவுடன் நடித்த காதல் அழிவதில்லை.அந்தப் படத்தில் ஒரு பொம்மையைப் போல வந்து சென்ற அவர் .இந்தப் படத்தில் நல்ல தேர்ச்சி பெற்று நடிப்பில் கலக்கியிருக்கிறார்.சரி படத்தின் கதைக்கு வருவோம் சென்னையில்  சாப்ட்வேர் கம்பெனியில் வேலைப்பார்க்க வரும் ஷார்மியை பிக்கப் செய்த கால் டாக்ஸி டிரைவர் எங்கே ட்ராப் செய்ய வேண்டும் என்று கேட்கிறார் அதற்கு ஷார்மி தனக்கு சென்னையில் யாரையும் தெரியாது என்று கூறுகிறார் பிறகு அந்த கால் டாக்ஸி டிரைவரே ஒரு வீட்டில் பேயிங் கெஸ்ட்டாக தங்க வைக்கிறார்.அந்த வீட்டில் இரண்டு முதியவர்கள் தனியாக வாழ்கின்றனர்.அந்த முதியவர்கள் ஷார்மியின் பெற்றோர்கள் பற்றி விசாரிக்க அவர்கள் இறந்து விட்டதாக கூறுகிறார் ஷார்மி.பின்னர் அந்த முதியவர் தணிகெலபரணி மற்றும் அவருடைய மனைவி ஷார்மியை ஒரு மகளைப்போல பார்த்துக்  கொல்கின்றனர்.

அந்த வீ ட்டிலே தங்கி வேலைக்கு சென்று வந்து கொண்டு இருந்த ஷார்மியை ஒரு மர்ம கும்பல் கொலை செய்ய அலைகிறது.இந்நிலையில் தன்னுடன் கல்லூரியில் படித்து சென்னையில் போலீஸ் ஆபிசராக பணியாற்றும் சேத்தன் சீனுவை சந்திக்கிறார்.ஒரு நாள் ஷாப்பிங் செய்து விட்டு வந்த ஷார்மியை அந்த மர்ம கொலைகார கும்பல் சுற்றி வலைக்கிறது.அந்த மர்ம கும்பலிடம் இருந்து ஷார்மியை காப்பாற்றிய சேத்தன் சீனு அவரை அந்த விட்டுக்கு அழைத்து செல்கிறார்.வீ ட்டினை பார்த்த சேத்தன் சீனு ஒன்றும் பேசாமல் தன்  தொலைபேசியில் உரையாடி விட்டு காவல் நிலையத்துக்கு ஷார்மியை அழைத்து சென்று ஒரு பையிலின் பக்கங்களை புரட்டுகிறார்.ஷார்மி என்ன நடக்கிறது என்று புரியாமல் அமர்ந்திருக்கிறார்.
அப்பொழுது அங்கே செய்தி சேகரிக்க வந்த நாலு ரிபோர்ட்டர்களையும் ஷார்மியையும் அழைத்துக்கொண்டு அந்த வீட்டுக்கு செல்கிறார்.சற்று முன் நன்றாக இருந்த வீடு பாழடைந்து இருப்பதை கண்ட ஷார்மி அதிர்ச்சி அடைகிறார்.பிறகு இந்த வீட்டில் இருந்த அனைவரும் 2 வருடத்திற்கு முன்னதாக இறந்து விட்டதாக சேத்தன் சீனு கூறுகிறார்.

பிறகு இவர்கள் உள்ளே வந்த கதவும் தானாகவே மூடிக்கொள்ள வெளியே வர வழியின்றி இருட்டில் மாட்டிக் கொள்கின்றனர்.இந்நிலையில் அந்த ரிபோர்ட்டர்கள் நாலு பேறும் இறந்து விடிகின்றனர்.இந்த ரிப்போடர்களை கொலை செய்தது யார்?எதற்காக கொலை செய்யப் பட்டார்கள் ?இவர்கள் இருவரும் அந்த வீட்டில் இருந்து எப்படி வெளியே வந்தார்கள் இது தான் மீதிக் கதை.

இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை இதில் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை எல்லாம் பயன் படுத்தி நன்றாக நடித்து இருக்கிறார் சேத்தன் சீனு.ஷார்மி அவர் தான் இந்தப் படத்தின் ஸ்டார் கதை அவரை மட்டுமே சுற்றி வருகிறது ஆனால் எந்த இடத்தில்லும் அவருடைய நடிப்பும் ,முக பாவமும் சலிப்பு தட்டவில்லை.

முதல் பாதியில் எந்த இடதில்லும் பேய் படத்துக்கான அறிகுறி தெரியவில்லை ஆனால் ஒரு சில காட்சிகள் பதட்டமாக இருந்தது .இரண்டாம் பாதியில் அந்த வீட்டினுள் சென்றவுடன் இருள்,பேய் என்று நம்மை  திகிழில் ஆழ்த்த பல விஷயங்கள் இருந்தாலும் ஏனோ பயம் வர வில்லை.மொத்தத்தில் இந்த பேய் படம் பார்க்க பயமாகவே இல்லை.

இந்த படத்தின் மதிப்பீடு  : 2.5/5

0 comments:

Post a Comment