Monday, December 21, 2015

தங்கமகன்(2015) திரைப்பட விமர்சனம்

By
தனுஷ் நடிப்பில் கடந்த டிசம்பர் 18 ஆம் நாள் வெளிவந்த திரைப்படம் "தங்கமகன்".இந்த  படத்தின் தலைப்பில் இருந்தே இது ஒரு மகன்,தாய்,தந்தை என ஒரு பாசப்பிணைப்பு மிக்க திரைக்கதை கொண்டிருக்கும் என கணிக்கமுடிகிறது அது மட்டும் அல்லாமல் "வேலை இல்லா பட்டதாரி" திரைப்படத்தை இயக்கிய வேல்ராஜ் மீண்டும் தனுஷுடன் இணைந்து இருப்பதாலும் மிகுந்த எதிர் பார்புகளோடு வெளிவந்த திரைப்படம் இது.

 தனுஷ் அவரது மனைவி சமந்தா மற்றும் தாய் ராதிகா மூவரும் மிகவும் வறுமையில் வாழ்வது போல் காட்டப்படுகிறது அங்கிருந்து ஒரு ப்ளாஷ்பாக்.ஒரு அழகான குடும்பம் அன்பான தந்தையாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சற்று ஞாபக மறதி உள்ளவர் வருமான வரி துறையில் வேலை செய்கிறார் தாயாக ராதிகா சரத்குமார் நண்பர்களாக சதீஷ் மற்றும் அதித் அருண் இவர் இனிது இனிது என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் இந்த திரைப்படத்தில் தனுஷின் மச்சானாக நடித்துள்ளார்.நண்பர்களுடனும் ,குடும்பத்துடனும் சந்தூஷமாக வாழ்ந்து வந்த தனுஷை ஒரு நாள் கோவிலுக்கு அனுப்பி வைக்கிறார் தாய் ராதிகா அப்பொழுது ஆங்கிலோ இந்திய பெண்னான ஏமியை பார்த்து காதல் வயப்படுகிறார்.பல தந்திரங்கள் செய்து எமியையும் காதல் செய்ய வைக்கிறார்.மொட்டை மாடியில் பீர் குடித்து விட்டு ஏமி தனுஷை கலைக்கும் காட்சிகள் மிக அருமை.இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகள் கண்டிப்பாக இளைஞர்களை கவரும் என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை.பின்பு ஒருநாள் ஏமியை கூட்டிக்கொண்டு டார்ஜில்லிங் செல்கிறார் தனுஷ் அங்கு தனுஷிற்கே தெரியாமல் வந்து தனுஷை சந்திக்கும் அதித் தனுஷ் காதலிக்கும் விஷயத்தை மறைத்து விட்டார் என கோபம் கொள்கிறார் நட்பே முறிந்து விட்டதாக கூறி சென்று விடுகிறார் அன்றே ஏற்பட்ட கருத்து மோதலால் தனுஷும் ஏமியும் பிரிகிறார்கள்.

சென்னை வந்த தனுஷ் மிகவும் சோகமாக காதலியை நினைத்து வருந்துகிறார்.பின் சில நாட்கள் கழித்து அதிதின் தாயான சீதா அதித் ஏமியின் கல்யாண பத்திரிக்கையை கொண்டு வந்து கே.எஸ்.ரவிக்குமாரிடம் கொடுக்கிறார்.தனுஷ் மாற்றம் அடைந்து தன் தந்தை வேலை செய்யும் அதே அலுவளகத்தில் வேலைக்கு சேர்கிறார்.ராதிகா தனுஷுக்கு சமந்தாவை பெண் பார்த்து திருமணம் செய்து  வைக்கிறார். இருவருக்கும் இடையே உள்ள அன்னுனியம் நிஜ தம்பதிகளே தோர்து போகும் அளவு உள்ளது.பிறகு தனது ஞாபக மறதியால் ஒரு முக்கியமான பையிலை எங்கோ வைத்து விட்டதாக தேடி அலைகிறார் கே.எஸ்.ரவிக்குமார் பின்பு நெருக்கடிகளை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்.பையில் கிடைக்காததால் தனுஷின் வேலையும் போய்விடுகிறது.இவை அனைத்தும் முதல் பாதியில் நடை பெறுகின்றன.

 கே.எஸ்.ரவிக்குமார் ஏன் தற்கொலை செய்து கொண்டார் யார் காரணம் என்று தனுஷ் தேடி அலைவது தான் இரண்டாம் பாகம். இரண்டாம் பாகம் மிகவும் அபத்தமாக உள்ளது எந்த ஒரு விஷயத்திலும் ஒரு அழுத்தம் இல்லாமல் நாம் திரைக்கதையுடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.தனுஷ் ரசிகர்களுக்கு கூட அவ்வளவாக பிடித்திருக்க வாய்ப்பில்லை.இந்த நிலைக்கு முதல் பாதியுடன் இரண்டாம் பாதியை கலந்து எப்படியாவது இழுத்து முடித்திருந்தால் கூட எதோ ஓரளவுக்கு அமர்ந்து பார்த்திருக்கலாம்.திரைப்படத்தின் சொதப்பல் என்றால் அது இரண்டாம் பாகம் தான்.நான் கதையை சொல்லாமல் நீங்கள் பார்த்தாலே டென்ஷனாகி விடுவீர்கள் .இதில் நான் இரண்டாம் பாகத்துடைய கதையையும் சொல்லிவிட்டால் அவ்வளவுதான்.அதை நீங்கள் திரை அரங்கிலேயே சென்று பார்த்து கொள்ளுங்கள்.பிடித்தால் உட்காருங்கள் இல்லையேல் வெளியேறி விடுங்கள்.

மொத்தத்தில் தங்கமகன் முதல் பாதியில்  மிண்ணுகிறான் இரண்டாம் பாதியில் மங்குகிறான்.

மதிப்பெண் : 2.5 /5


0 comments:

Post a Comment