Wednesday, October 14, 2015

மசாலா படம் -விமர்சனம் | Masala Padam(Tamil) Review.

By
மசாலா படம் இது அடிக்கடி நாம் திரைப்படத்தினை விமர்சிக்க பயன் படுத்தும் வார்த்தை அதனையே இந்த திரைப்படத்தின் தலைப்பாகவே  வைத்து உள்ளார்களே அப்பொழுது நிறைய புதுமைகள் இருக்கும் என்று ஆர்வத்துடன் திரை அரங்குக்குள் போய் அமர்ந்தேன்.

திரைப்படத்தின் கதை என்றக் கேட்டால் இன்றைய இணைய வளர்ச்சியை பயன்படுத்தி மசாலா திரைப்படங்களை உலக சினிமாவுடன் ஒப்பிட்டு பார்த்து விமர்சனம் செய்யும் இளைஞர்கள் ஒரு படத்தினை கேவலமாக விமர்சனம் செய்து வெளியிடுகின்றனர் அது படத்தின் வருமானத்தை பாதிக்கிறது. அதனால் அப்படத்தின் தயாரிப்பாளர் பாதிப்படைகிறார் தயாரிப்பாளரின் மகண் அந்த இளைங்கரில் ஒருவரை விபத்துக்கும் உள்ளாக்குகிறார்.


பிறகு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும் அந்த இளைங்கர்களும் நேர் எதிரே சந்திக்கின்றனர் அந்த இளைஞர்கள் உலக சினிமாவுடன் ஒப்பிட்டு பேச ஆத்திரம் அடைந்த தயாரிப்பாளர் உங்களால் பேச மட்டும் தான் முடியும் ஒரு நல்ல மசாலா படத்தின் கதையை கொண்டு வர முடியுமா அப்படி கொண்டு வந்தால் நானே தயாரிக்கிறேன் என்று முதல்வன் ரகுவரன் போல் சவால் விடுகிறார்.இளைங்கர்களும் சவாலை ஏற்றுகொண்டு கதையை தேடி அலைகின்றனர்.

அப்பொழுது அவர்கள் சந்திக்கும் மிடில் கிளாஸ் இளைங்கனாண சிவா ,உயிர் எடுக்கும் கொடூர கொலைகாரனான சிம்ஹா மற்றும் பொறுப்பு இல்லாமல் சுற்றி திரியும் கவுரவ் ஆகிய மூவரையும்  பின்தொடர எண்ணுகிறார்கள் அதற்க்கு ரேஷ்மாவின் உதவியை நாடுகிறார்கள்.

இப்பொழுது நான் சொல்லிய கதைவரை திரை அரங்கில் நீங்கள் உட்கார்ந்து படம் பார்க்கலாம்.இதற்க்கு பிறகு திரைக்கதையில் ஏனோ மிகப்பெரிய தொய்வு ஏற்ப்படுகிறது.பிறகு இந்த திரைப்படத்தில் இருக்கும் ஒரே நல்ல விஷயம் சிவா மட்டும் தான்.இந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ப அவருடைய ஸ்டைலில் அற்புதமாக நடித்திருக்கிறார்.தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா இந்த படத்திற்கு என்று தனியாக அலுட்டிகொள்ளவில்லை ஜிகிர்தண்டா படத்தில் அவர் எப்படி முகத்தை இறுக்கமாக வைத்திருந்தாரோ அதைத்தான் இங்கேயும் செய்திருக்கிறார்.கவுரவ் ஏதோ செய்திருக்கிறார் சொல்லிகொள்ளும்படி ஒன்னும் இல்லை.கதாநாயகி வந்து போயிருக்கிறார் சில நேரங்களில் அழகாக இருக்கிறார்.உண்மை வாழ்க்கையில் மசாலா குறைவு என்பதாலோ என்னவோ சில காட்சிகளை எதார்த்தமாக எடுக்க முயன்று இருக்கிறார்கள் ஆனால் அது எடுபடவில்லை.

இறுதியில் அந்த கதையை திரைப்படமாக எடுத்தார்களா என்பது தான் மீதி கதை. இந்த படத்தினை இறுதிவரை பார்க்க முடிகிறது என்றால் அது சிவாவிற்காக  மட்டுமே.

மொத்தத்தில் மசாலா பிரியாணியா இல்லை பொங்கலா என்று போட்டிபோட்டு இறுதியில் பொங்கலுடன் மசாலா அதிகமாக சேர்த்து கொடுத்திருகிறார்கள்.பிடிக்கிறதா பிடிக்கவில்லையா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

இந்த திரைப்படத்துக்கு மதிப்பெண் என்று கொடுத்தால் நான் : 1.5/5 தான் கொடுப்பேன்.



0 comments:

Post a Comment