Thursday, November 19, 2015

அஜித்தின் வேதாளம் திரையரங்கில்-ஒரு நேர்மையான பார்வை

By
தீபாவளி அன்று அஜித் அவர்கள் நடித்து வெளிவந்த திரைப்படம் "வேதாளம் "
படம் வெளிவந்து பல நாட்கள் ஆகிவிட்டதால் இடுக்கையின் தலைப்பிலேயே திரை விமர்சனம் என்று எழுதாமல் ஒரு நேர்மையான பார்வை என்று மாற்றப்பட்டு உள்ளது.அதாவது உள்ளதை உள்ளபடியாக கூறுவது.சரி விமர்சனத்துக்கு போகலாம்.

திரைப்படம் வெளிவரும் சில நாட்களுக்கு முன்பிலிருந்தே அஜித் ரசிகர்கள் மிக அதிக அளவில் வேதாளம் ட்ரைலேர் மற்றும் புகைப்படத்தை சமுக வலைத்தளங்களில் ஷேர் செய்து இருந்தனர் அதனால் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்தது.

அஜித்தை பொருத்தமட்டில் அவருடைய மற்ற படங்களில் இருந்து இந்த படம் ஒரு பெரிய மாஸ் ஹீரோவாக உயர்வு கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம் .அதற்கு முக்கிய காரணம் அவருடைய ரசிகர்கள்.

படத்தின் கதை என்று பார்த்தால் ஒரு பழைய அண்ணன்,தங்கை பாசக்கதை ஆனால் அவர் அந்த  தங்கையின் உண்மையான அண்ணன் இல்லை .இதைப் போன்ற கதைகளை நாம் பார்த்து அலுத்து விட்டோம் ஆனால் காட்சி அமைப்புகள் ,நகைச்சுவை ,அக்க்ஷன்,பாடல் போன்ற கமெர்சியல் நெடி ஏற்றி ரசிக்கும் படியாக விருந்து படைத்துள்ளனர்.நீங்கள் இந்நேரம் படமே பார்த்து இருப்பீர்கள் அதனால் படத்தின் கதையை நான் அதிகமாக விளக்கி கூறி விமர்சனம் செய்ய விரும்பவில்லை.

அஜித் வரும் ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்குகளில் விசில்,சத்தம் என தூள் பறக்க விட்டு விட்டார்கள் ரசிகர்கள்.சில சீரியசான காட்சிகளில் எழுந்து நின்று கைதட்டினார்கள் நான் சற்று குனிந்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தேன்.படம் முடியும் வரை மூன்று நான்கு இடங்களில் சிரித்துவிட்டேன்.அது என்னவோ அஜித் ரசிகர்கள் ரசித்து உருகி பார்க்கும் சில காட்சிகளை நடுநிலையாக பார்பவர்களால் சிரிக்க மட்டுமே முடிகிறது.அதிலும் அவர் அலுது கொண்டு பின்பு சிரிக்கும் காட்சி (பா ..........).

எது எப்படி ஆனாலும் இது குடும்பத்துடன் பார்க்க வேண்டிய நல்ல கமர்ஷியல் திரைப்படம்.பார்க்காதவர்கள் கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று பாருங்கள்.

இதை இங்கு சொல்ல வேண்டாமோ என்று தோன்றுகிறது ஆனாலும் சொல்கிறேன்.சமுக வலைதளங்களில் அஜித் ,விஜய் போன்ற நடிகர்களின் படங்களுக்காக இளைஞர்கள் கேவலமாக பேசிக்கொள்வதும் சண்டையிடுவதும் ஒரு சிறப்பான விஷயமாக தோன்றவில்லை.உலகில் எவ்வளவோ பிரச்சனைகள் நடந்து கொண்டு இருக்கின்றன.சிலர் உன்ன உணவின்றி தவிக்கிறார்கள்.தமிழகமே இன்று இரண்டு வகையான தண்ணீரினால் தத்தளிக்கிறது.ஆனால் சமுக வலைதளங்களில் உலா வரும் சில இளைஞர்களுக்கு இது தான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

0 comments:

Post a Comment