இந்த தலைப்பில் நான் எழுத தொடங்குவதற்கு முன்னரே கூறிவிடுகிறேன் நான் ஒரு கமல் ரசிகன்.
கடந்த வாரம் இந்திய திரை ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த திரைப்படம் கபாலி .இந்த திரைப்படம் திரையிடப்பட்ட நாள் முதலே விமர்சனங்களுக்கு பஞ்சமில்லை.ஒரு திரைப்படம் வெளிவந்து இத்தனை நாட்களுக்கு பிறகும் இவ்வளவு பரபரப்பா ஏன் விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் எழுதப்பட்டு வருகிறது ? இதற்கு ஒரே ஒரு பதில் தான் இது சூப்பர் ஸ்டார் நடித்த திரைப்படம்.இதில் இந்த திரைப்படம் திரைக்கு வந்த நாளிலேயே இதன் நகல் இணையத்தில் வெளியானதாக ஒரு செய்தி கசிந்தது.ஒரு வேலை அதனை பார்த்து விட்டு தான் இப்படி எதிர் மறையாக விமர்சனம் செய்கிறார்களோ என்ற கேள்வி எனக்கு எழுகிறது.சமீப காலங்களில் சமூக ஊடகளில் அதிக மாக வெளியிடப் பட்ட எதிர்மறை விமர்சனங்களால் தோல்வி அடைந்த திரைப்படங்கள் அதிகம்.ஆனால் கபாலி அந்த வரிசையில் வரவில்லை.
சூப்பர் ஸ்டார் படங்களில் எனக்கு தெரிந்த வரையில் சமீப காலத்தில் இதைப்போன்று திட்ட திட்ட ஐம்பது சதவிகிதம் நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்கள் நிலவியதே கிடையாது ஒன்று அது ரசிகர்களில் பேராதரவுடன் மாபெரும் வெற்றி படமாக இருக்கும் இல்லையேல் அதை ஒரு வெற்றி படம் என்று கூற முடியாத அளவுக்கு இருக்கும்.இதைப்போன்று சம அளவு எதிர்மறை மற்றும் நேர்மறை கருத்துக்கள் கமல் படத்துக்கு தான் அதிகமாக இருக்கும் உதாரணத்திற்கு பல படங்கள் உண்டு அவைகள் எல்லாம் சில நாட்களுக்கு பிறகு சிறந்த திரைப்படம் என அனைவராலும் பாராட்டப்பட்டது.ஒரு வேலை அப்படி தான் ரஜினிக்கு இந்த திரைப்படம் இருக்குமோ ?
இந்த திரைப்படம் பல புதிய விமர்சகர்களையும் உருவாக்கி உள்ளது என்பதை உணர்கிறேன்.பல்வேறு எதிர்மறை விமர்சனங்களையும் மீறி கபாலிரூபத்தில் சூப்பர் ஸ்டார் ஸ்டைலாக வெற்றி நடை போட்டுக் கொண்டு இருக்கிறார்.

0 comments:
Post a Comment