Monday, December 14, 2015

ஈட்டி திரைப்பட விமர்சனம்

By
ஈட்டி -இந்த திரைப்படத்தின் கதா நாயகன் அதர்வா கதா நாயகி ஸ்ரீ திவ்யா இவர்களை தவிர்த்து அதர்வாவின் தந்தையாக ஜெயப்பிரகாஷ் ,கோச் ஆக ஆடுகளம் நரேன் போன்றவர்களும் உண்டு.அதர்வாவின் தங்கையாக நடித்த அந்த பெண்ணின் முகத்தை எங்கோ பார்த்துபோல  இருந்தது நன்றாக கவனித்து பார்த்தால் அட அது நம்ம சூப்பர் சிங்கர் ஜூனியர் நித்யாஸ்ரீ ஆனால் இவருக்கு நடிக்க அதிக வாய்ப்பில்லை.சில முறை வந்து அதர்வா கையில் இருக்கும் கப்புகளை வாங்கி அடுக்கி வைக்கிறார்.சரி படத்தின் விமர்சனத்துக்கு வருவோம்.

அதர்வா புகழேந்தி என்கிற புகழாக தஞ்சாவூர் நகரத்தை சேர்ந்த இளைஞனாக இந்த படத்தில் (வாழ்ந்திருக்கிறார்) நடித்திருக்கிறார் தலை முதல் கால் வரை ஒரு அத்லேடுக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் உள்வாங்கி வாழ்ந்திருக்கிறார்.இன்னும் சில காலங்களில் இவரை நிறைய அழுத்தமான கதா பாத்திரங்களில் பார்க்கும் வாய்ப்பு நமக்கு உள்ளது.இந்த திரைப்படத்தின் கதையின் படி சிறு வயது முதலே காயம் பட்டால்  இரத்தம் உறையாத வியாதி (என்னனோவோ பெயரெல்லாம் ஆங்கிலத்தில் கூறுகிறார்கள் ) ஒரு குண்டு ஊசியால் குத்தினால் இவர் சிறிது நேரத்தில் மயங்கி விடுவார்.பலத்த கீறல்கள் அவர் மேல் பாய்ந்தால் உயிர் பிழைப்பதே கஷ்டம் .இதை ஒரு குறையாக எண்ணாமல் விழையாட்டில் முழு கவனத்தையும் செலுத்தி ஒரு ஓட்டப்பந்தைய வீரர் ஆகிறார்.கல்லூரி அளவில் நடக்கும் போட்டியில் தேசிய சாதனையை முறியடிக்கிறார்.பிறகு இந்திய அளவிலான போட்டிக்கு கொல்கட்டா போக காத்திருக்கிறார்.அதர்வாவின் தந்தையாக வரும் ஜெயப்பிரகாஷ் ஒரு நேர்மையான கான்ஸ்டபிள் மகனை எப்படியாவது தேசிய போட்டியில் வெற்றி பெற வைத்து ஒரு போலீஸ் அதிகாரியாக்கும் கணவோடு உள்ளார்.அதர்வாவின் அம்மாவாக சோனியா இரண்டு மூன்று நகைச்சுவைக்கு பயன் படுத்த பட்டு உள்ளார்.

ஒரு நாள் இரவில் அதர்வாவிற்கு தொலைபேசி அழைப்பு வருகிறது எடுத்து பேசினால் ஒரு பெண் மிக கேவலமாக திட்டுகிறார்.அட யார் அந்த பெண் நம்ம ஹீரோயின் ஸ்ரீ திவ்யாவே தான்.தன் தோழியை டார்சேர் செய்தவன் தொலைபேசிக்கு பதிலாக அதர்வா தொலைபேசிக்கு அழைத்து கிழி கிழியென கிழித்து விட்டார்.பிறகு மன்னிப்பு கேட்க அதர்வவோ இனி நான் எப்பொழுது அழைத்தாலும் என் போனுக்கு டாப் அப் செய்ய வேண்டும் என்று மிரட்டுகிறார்.ஸ்ரீ திவ்யாவும் டாப் அப் செய்யவே தொலை பேசி அழைப்பிழும் டாப் அப் செய்வதிலும் இந்த காதல் தொடர்கிறது.

இதெல்லாம்  ஒரு புறம் இருக்க களவாணி படத்தில் வில்லனாக நடித்தவர் தான் இதில் ஸ்ரீ திவ்யாவின் அண்ணன்.ஒரு முறை ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை வாங்கிய பொழுது அதில் நாலு கள்ள நோட்டுக்கள் இருப்பதை  அறிந்தவுடன் அந்த கள்ள நோட்டை கொடுத்தவனை தேடி கண்டு பிடித்து போலீசில் பிடித்து கொடுக்கிறார்.ஆனால் அந்த கள்ள நோட்டுக்கள்  போலீசே பகைத்து கொள்ள முடியாத கள்ள நோட்டு mafia கும்பலின் தலைவன் (அட நம்ப வில்லன் என்ட்ரி) R .N .R மனோகர் உடையது . வில்லனுடைய தம்பி போல உள்ள கையாழுக்கு ஸ்ரீ திவ்யா மீது காதல்.பெண் கேட்டு R .N .R மனோகர் ஸ்ரீ திவ்யாவின் தந்தையான அழகன் பெருமாள் வீட்டிற்கு செல்கிறார்.பெண் பார்க்க அழைத்து சென்ற கூட்டத்தில் கள்ள நோட்டு மாத்தியவன் இருந்ததால்.ஸ்ரீ திவ்யாவின் அண்ணன் அவனை அடித்து துரத்துகிறார்.

இந்நிலையில் கொல்கட்டாவில் நடப்பதாக இருந்த போட்டி சென்னைக்கு மாற்றப்படுகிறது.தஞ்சாவூரில் இருந்து உடனே சென்னை வருகிறார் அதர்வா.ஸ்ரீ திவ்யாவும் அதர்வாவும் நேரில் சந்திக்க முடிவெடுத்து ஒருவரை ஒருவர் காண வந்துகொண்டு இருக்கின்றனர்.ஸ்ரீ திவ்யாவின் அண்ணனை கொலை செய்ய R .N .R மனோகர் ஆட்கள் துரத்துகின்றனர் அவர் அதர்வாவிடம் லிப்ட் கேட்டு சென்று இறங்கி விடுகிறார்.அதனால் அதற்வாவை அடிக்க வருகின்றனர்.அதர்வா பின்னி பெடலேடுத்து விடுகிறார்.ஸ்ரீ திவ்யா அதர்வா சண்டையிடுவதை பார்த்து பயந்து சென்று விடுகிறார்.

பிறகு ஒருநாள் ஸ்ரீ திவ்யாவின் அன்னன் அழைப்பை ஏற்று தன காதலியின் வீடு என்றே தெரியாமல் ஸ்ரீ திவ்யாவின் பிறந்தநாள் விழாவிற்கு செல்கிறார்.அந்த விழாவில் நடந்த உண்மை எல்லாவற்றையும் ஸ்ரீ திவ்யாவின் அண்ணன் அவருக்கு எடுத்து சொல்கிறார்.மீண்டும் காதல் மளர்கிறது.பின்னர் R .N .R மனோகர் பற்றி DC செல்வாவிடம் புகர் கொடுக்கிறார் நமது களவாணி  திரைப்படத்தின் வில்லன்.மனோகர் கைது செய்ய படுகிறார்.கள்ள நோட்டு கும்பல் கோபம் அடைகிறது.அடுத்த நாள் தடகளப் போட்டி இருக்க ஸ்ரீ திவ்யா அண்ணன் மீண்டும் கெடத்தப்படுகிறார்.ஸ்ரீ திவ்யா அதர்வாவிடம் சொல்லவே அவர் காப்பாற்றுகிறார்.அன்று இரவே DC செல்வாவை பார்த்து விட்டு திரும்பிய ஸ்ரீ திவ்யாவின் அண்ணன் கொள்ளப் படுகிறார்.கொலைக்கும்பல் இப்பொழுது அதர்வாவை குறி வைக்கிறது.

அதர்வா நாலை நடக்கும் போட்டியில் கலந்து கொண்டாரா.வில்லன்களிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொண்டாரா என்பது தான் மீதி கதை.

திரைப்படம் மிகவும் வேகமாக செல்லாவிட்டாலும் ஸ்வார்ஸ்யம் குறையாமல் உள்ளது.சமிபத்தில் வெளியான விளையாட்டை மையமாக வைத்து எடுக்க பட்ட படங்களின் பாணியில் இது  இல்லாதது பலம்.

இந்த திரைப்படத்தில் நாம் இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இரண்டு பேர் முதலில் சினி மொடோக்ராபர் சரவணன் அபிமன்யு.அதுவும் சண்டைகாட்சிகளில் பிரேமாத படுத்தியிருக்கிறார்.இரண்டாவது இசை அமைப்பாளர் அனிருத் ரீ ரக்காடிங் பிரமாதம்.

எந்த சூழ்நிலையிலும் ,உடல் நிலையிலும் விளையாட்டில் மட்டும் அல்ல எதார்த்த வால்ழகையிலும் பயிற்சி மிக அவசியம்.என்ற கருத்தை கோரி இருக்கிறார்கள்.

மதிப்பெண் : 3.5/5

கண்டிப்பாக நீங்கள் ஒரு முறை பார்க்கலாம்.
0 comments:

Post a Comment